இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Thursday February-15 2024

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று அப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படம் வித்தியாசமான களத்தில், மிகப்பெரிய ஆக்‌ஷன் கமர்ஷியல் ஜானர் திரைப்படமாக உருவாக உள்ளது. சமீபத்தில் தென்னிந்திய முழுக்க பிரபலமாகி இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழும் கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

 

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, அருண் வெஞ்சரமுத்து கலை இயக்குநராக பணியாற்றுகிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

SK and ARM Movie Shoot Stard

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

9526

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery