தொழிலையும் தாண்டி, இது என் காதல்! - கோலிவுட்டில் களம் இறங்கும் மேகா ஷெட்டி
Thursday February-15 2024

வேற்று மொழிகளைச் சேர்ந்த நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவதோடு, ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைவதற்கு பேரார்வம் கொண்டிருப்பவர் மேகா ஷெட்டி. கன்னட சினிமா மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய மேகா ஷெட்டி, தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதித்து, தனது திறமையை நிரூபிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வரும் மேகா ஷெட்டி, தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் மேலும் ஒரு தொலைக்காட்சி சீரிஸையும் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். தனது அபாரமான நடிப்புத் திறனை வெள்ளித்திரையிலும்  அவர் வெளிப்படுத்தியுள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவராக இருக்கிறார். மேகாவின் அபாரமான நடனத் திறன்  அவரது புகழை இன்னும் அதிகமாக்கி நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. 

 

மேகா ஷெட்டிக்குப் பிடித்த ஜானர் மற்றும் அவர் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி கேட்டபோது, ”எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்புகிறேன். தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு அப்படியான கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறது. நானும் அதைப்போன்ற கதாபாத்திரங்களை ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துள்ளேன். நடிப்புத் தவிர, திரைப்படங்களைத் தயாரிக்கவும், எதிர்காலத்தில் திரைப்பட ஆர்வலர்களுக்கு தரமான கதைகளை கொடுக்கவும் விரும்புகிறேன். இது எனது குடும்பத் தொழில். தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்” என்றார்.

Related News

9527

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery