இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்தின் கட்டட பணியை தொடங்குவதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தனது முகாம் அலுவலகத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம், சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக, சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் கூட்டாக உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை பெற்றுக் கொண்டார்கள்.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...