இளம் தலைமுறையினரின் அவலத்தை சொல்ல வரும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!
Sunday February-18 2024

சிவி குமார் தயாரிப்பில், சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாத் ராமர், இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பூர்வா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், இப்படத்தை தயாரித்து இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

 

சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்வியலை சுற்றி நகரும் இப்படத்தின் கதைக்களம் சாலையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

 

செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், ப்ரீத்தி கரன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பு செய்துள்ளார். விஜய் ஆதிநாதன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

மதுரை மற்றும் மாயவரம் பகுதிகளில் 42 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இப்படத்தின் முழு படப்பிடிப்பும், பின்னணி வேலைகளும் தற்போது முடிவடைந்துள்ளது. வரும் மார்ச் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.

Related News

9532

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery