இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக திகழ்ந்து வருவதோடு, ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் முக்கிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இதனால், இனி அவர் நடிக்கும் அனைத்து படங்களும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி, விஜய் ஆண்டனியின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘அண்ணாதுரை’ படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் வெளியாகிறது.
இதற்கிடையே, நேற்று வெளியான ‘அண்ணாதுரை’ மற்றும் ‘இந்திரசேனா’ படங்களின் டிரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு, அனல் பறக்கும் வசனங்களோடும் வெளியாகியிருக்கும் ‘அண்ணாதுரை’ விஜய் ஆண்டனியின் ஹிட் படங்களில் ஒன்று, என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் டிரைலர் அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தில் டயானா ஹீரோயினாக நடிக்க, ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது போல, தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலரும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிரைலரை பார்க்க :
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...