‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா, தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இதில் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக பிரிகிடா சகா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இவர்களுடன் மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளனர்.
கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். வீரமணி கணேசன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இளைஞர்களை மையப்படுத்திய உணர்ச்சிகரமான திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான சண்டை காட்சி ஒருவாரம் படமாக்க திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...