Latest News :

சிறுபடங்களுக்கு பெருநம்பிக்கை கொடுத்த ‘அரணம்’ வெற்றி!
Monday February-26 2024

தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் திரைப்படங்கள் எடுப்பதைக் காட்டிலும் அதை வெளியிடுவதிலும், வெற்றிப்படமாக்குவதிலும் பெரும் சிக்கல்கள் இருக்கிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தாலும், சிறுபடங்களின் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் நிலையில், அந்த நிலையை 2024 ஆம் ஆண்டில் மாற்றிய முதல் சிறுமுதலீட்டு திரைப்படம் என்ற பெருமையை ‘அரணம்’ பெற்றிருக்கிறது.

 

பாடலாசிரியராக பல வெற்றிகளை ருசித்த பிரியன், ‘அரணம்’ மூலம் கதாநாயகன் மற்றும் இயக்குநர் என்று இரண்டு புதிய அவதாரங்களை எடுத்தார்.  தனது பணிகளை சிறப்பாக செய்து தனது முதல் படத்தை மக்களுக்கு ஏற்ற ஜனரஞ்சகமான படமாக மட்டும் இன்றி, தான் சொல்ல் வந்த கதையை நேர்மையான முறையில் கொடுத்தவர், அப்படத்தை வெளியிட வழக்கம் போல் பல பிரச்சனைகளை சந்தித்தார். இருந்தாலும், தனது படைப்பின் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து கடும் போராட்டங்களுக்குப் பிறகு தனது படத்தை வெளியிட்டவர், இன்று அப்படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்.

 

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தமிழ்நாடு மட்டும் இன்றி கர்நாடகம் , கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘அரணம்’ திரைப்படம் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையின் போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி, தனக்கான திரையரங்கங்கள் குறைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிய ‘அரணம்’ ஏழு வாரங்களை கடந்து தற்போது எட்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

 

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையில் ஒரு திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடுவது இமாலய சாதனையாக கருதப்படும் நிலையில், அந்த சாதனையை ‘அரணம்’ போன்ற சிறுபடம் நிகழ்த்தியிருப்பது அப்படக்குழுவுக்கு கிடைத்த வெற்றி மட்டும் அல்ல, இதுபோன்ற சிறுபடங்களை எடுப்பவர்களின் வெற்றியாகவும், அவர்களின் பெருநம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

 

தனது கடுமையான உழைப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் இத்தகைய வெற்றியை சாத்தியமாக்கியுள்ள நாயகன் மற்றும் இயக்குநர் பிரியன் கூறுகையில், “50 நாள் என்பது பெரிய படங்களுக்கே கிட்டாத உயரம். சிறு படங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. இப்பெரும்பேறு.. வரலாறு.. பெரும் சாதனை..  அரணம் போன்ற எளிய படத்திற்கு கிடைத்திருப்பது மற்ற சிறுபடங்களுக்கான பெருநம்பிக்கை.

 

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில்  இன்றிலிருந்து மதியம் 03.00 மணிக்காட்சியில் ’அரணம்’ திரைப்படம் காணலாம். 

 

இந்நேரத்தில் இதைச் சாத்தியப்படுத்திய ’தமிழ்த்திரைக்கூடம்’ தயாரிப்பு நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும், உருவாக உழைத்த ’அரணம்’ திரைக்குழுவினருக்கும், சிறப்பான முறையில் உடன்நின்று வெளியிட்ட ’உத்ரா புரொடக்சன்ஸ்’ ஹரிஉத்ரா அவர்களுக்கும், ஏற்று அங்கீகாரம் தந்த பத்திரிக்கை மற்றும் ஊடக அன்பர்களுக்கும், ஏற்றுகொண்டு கொண்டாடி அடையாளம் தந்த மதிப்புமிகு மக்களுக்கும் மனம் நிறைந்த அகமார்ந்த நன்றிகள்.

 

மேலும் என்னை ஒரு கதை நாயகனாகவும், இயக்குநராகவும் ஏற்றுக்கொண்ட அத்துணை பேருக்கும் ஆழமான நன்றிகள்.” என்றார்.

Related News

9551

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery