Latest News :

தென்னிந்திய சினிமாவில் நுழையும் நடிகை ஜான்வி கபூர்!
Monday February-26 2024

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் நுழைந்துள்ளார்.  இந்த வருடம் ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. 

 

இந்த நிலையில், தர்மா புரொடக்‌ஷன்ஸ் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார்.  வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைக்கொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார்.

 

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறுகையில், “ஒரு மிகப்பெரிய  படத்தின் ஒரு பகுதியாக  நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது  தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன்.” என்றார்.

 

ஜான்வி கபூரின் தாயார், பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, ஜூனியர் என்டிஆரின் தாத்தா - என்.டி ராமாராவ் உடன் தனது தென்னிந்திய அறிமுகத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

ஶ்ரீதேவி போல ஜான்வியும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருப்பதன் மூலம், வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் ஒரு சிறப்பாக நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடிகை ஜான்வி கபூர், நடிகர் ஜூனியர் என்டிஆருடன் அறிமுகமாகிறார்!  

 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மாஹி, தேவாரா, உலஜ் போன்ற பிரமாண்டமான வெளியீடுகளுடன், சன்னி சங்கிகாரி கி துளசி குமாரி என ஜான்வி கபூரின் திரைப்பட வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

Related News

9555

ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து - இயக்குநர் பேரரசு பேச்சு!
Monday January-26 2026

சங்கமித்ரன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை - ‘காதல் கதை சொல்லவா’ பட விழாவில் நடிகர் நகுல் நெகிழ்ச்சி
Saturday January-24 2026

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...

Recent Gallery