கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது. மேலும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இந்த ஜாபர் சாதிக் ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அமீர் இயக்கும் ’இறைவன் மிகப் பெரியன்’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தவர், கயல் ஆனந்தியை கதையின் நாயகியாக வைத்து ‘மங்கை’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படம் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பதால் ‘மங்கை’ படம் வெளியாவது சிக்கல் என்று கூறப்படுகிறது.
‘மங்கை’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கை ஒருபடி மேலே முன்னேறியிருக்கிறது, என்றெல்லாம் பேசிய நடிகை கயல் ஆனந்தி, தற்போது அப்படம் வெளியாவதே சிக்கல் என்ற நிலை வந்திருப்பதால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். மேலும், இயக்குநர் அமீர் இயக்கி வந்த ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுட்டதாம்.

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...