விஜயின் ‘தலைவா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வருண், ‘ஒரு நாள் இரவில்’, ‘போகன்’, ‘வனமகன்’ உள்ளிட்ட பல படங்கலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், ‘பப்பி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், தற்போது கெளதம் மேனம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அப்படத்திம் நடித்த அனுபவம் பற்றி நாயகன் வருண் கூறுகையில், “கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில் தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஆக்ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆக்ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடிக்க, நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மதன் கார்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். யானிக் பென் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...
’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...