தேவி அறக்கட்டளை மூலம் ஏலை எளியோருக்கு பல வகையில் உதவி செய்து வரும் நடிகர் விஷால், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தயாரிப்பாளர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொரு தீபாவளியன்றும் வழங்கப்படும் பட்டாசு மற்றும் இனிப்புக்கு பதிலாக அன்பளிப்பாக பண உதவி செய்ய வேண்டும் என்று விஷாலிடம் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட விஷால், இந்த ஆண்டு முதல் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த அன்பளிப்பை பெற விரும்பும் தயாரிப்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை சங்கத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...