இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும் படங்கள் மட்டும் இன்றி தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படங்களும், சமூக கருத்துக்களை பேசுவதோடு, சமூக பிரச்சனைகளை பின்னணியாக கொண்ட படங்களாக மட்டுமே இருக்கும். அதை பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் சொல்லி தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இயக்குநர் பா.இரஞ்சித், ’ஜெ பேபி’ படத்திற்காக தனது கொள்கையை சற்று தளர்த்திக்கொண்டிருக்கிறார்.
ஆம், சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை தயாரித்து வந்த இயக்குநர் பா.இரஞ்சித், குடும்ப உறவுகளைப் பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்திருக்கும் படம் ‘ஜெ பேபி’. சுரேஷ் மாரி இயக்கியிருக்கும் இப்படத்தின் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி கவனம் பெறும் நிலையில், ‘ஜெ பேபி’ படம் அதை சற்று அதிகமாகவே பெற்றிருக்கிறது. காரணம், படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரக் கூட்டணியோடு, இயக்குநர் பா.இரஞ்சித்தின் புதிய பயணமும் தான்.
இந்த நிலையில், சமீபத்தில் ‘ஜெ பேபி’ படத்தின் சிறப்புக்காட்சி திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும், இயக்குநர் சுரேஷ் மாரி, தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியதோடு, படம் உணர்வுப்பூர்வமாக இருப்பதோடு, சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறது. நிச்சயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம், என்று கூறி பாராட்டியுள்ளனர்.
மேலும், படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரி படம் குறித்து கூறுகையில், “இது அனைவருக்குமான படம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். படம் பார்க்க திரையரங்கிற்கு வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள்.” என்று அன்புக்கட்டளையும் போட்டுள்ளார்.
சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பெற்றுள்ள ‘ஜெ பேபி’ உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...