Latest News :

“ஆக்‌ஷன் காட்சிகளுக்கு வருண் உயிர் கொடுத்திருக்கிறார்” - இயக்குநர் கெளதம் மேனன் புகழாரம்
Thursday February-29 2024

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. இதில் வருண் நாயகனாக நடிக்க, நாயகியாக ராஹே நடித்திருக்கிறார். நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

 

நாளை (மார்ச் 1) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் பற்றியும், நாயகன் பற்றியும் இயக்குநர் கெளதம் மேனன் கூறுகையில், “எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்‌ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் எனப் பல விஷயங்கள் ஆக்‌ஷன் படங்களை உருவாக்குவதில் உள்ளது.  இருப்பினும், வருணுடன் பணியாற்றுவது ஒரு இனிமையான அனுபவம். அவர் படப்பிடிப்பைத் தொடங்க ஆர்வமாக இருந்ததோடு, கதாபாத்திரத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் உறுதியாக இருந்தார். இந்த திரைப்படத்தில் ஆக்‌ஷன் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், கதையோட்டத்தில் எமோஷன் மற்றும் காதலும் பின்னிப்பிணைந்துள்ளது. வருண் கதையில் வரும் அனைத்து ஸ்டண்ட்களையும் பாடி டபுள் இல்லாமல் செய்தார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியதாக இருந்தது. வருண் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்க, ராஹேவின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கும். கிருஷ்ணா வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்று ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொண்டதோடு, செட்டில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஸ்டண்ட் டீம் சிறப்பானப் பணியைச் செய்துள்ளார்கள். திரையரங்குகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.” என்றார்.

 

Goutham Menon and Varun in Joshua Imai Pol Kakka

 

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். யானிக் பென் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

9562

ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகம் முதல் பாடல் 22 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday January-20 2026

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...

’அறுவடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Tuesday January-20 2026

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...

அமேசான் மியூசிக் குளோபல் 2026 ஆர்டிஸ்ட்ஸ் டு வாட்ச் பிரச்சாரத்தை துவங்கியது
Tuesday January-20 2026

அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த  ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக,  2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய  தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க  கலைஞர்கள்”   வருடாந்திர பட்டியலை  இன்று அறிவித்துள்ளது...

Recent Gallery