நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.இரஞ்சித், தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். குறிப்பாக தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்களை தனது நிறுவனத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இயக்கும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பசுபதி, ஸ்ரீநாத் பாஸி, விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சபீர் உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...