’ஆதலால் காதல் செய்வீர்’, ’மாவீரன் கிட்டு’, ’வில் அம்பு’ என தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன், தற்போது திரையரங்க அதிபராகியுள்ளார். திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ‘விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ்’ என்ற பெயரில் புதிய திரையரங்கத்தை அவர் திறந்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களுடன், அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ் 350 இருக்கைகள் கொண்ட, 7.1 டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன், திருவாரூர் மாவட்ட சினிமா ரசிகர்களுக்குச் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திரையரங்கத்தின் திறப்பு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டு, திரையரங்க அதிபராகியுள்ள தயாரிப்பாளர் தாய் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் ‘வள்ளி மயில்’ திரைப்படத்தை மிக பிரமாண்டமான முறையில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...