Latest News :

கே.எஸ்.ரவிக்குமாரை காத்திருக்க வைத்த ’பள்ளிப் பருவத்திலே’
Thursday October-12 2017

விகேபிடி கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில் வாசுதேவ் பாஸ்கர் எழுதி இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இப்படத்தில் நந்தன் ராம் ஹீரோவாக அறிமுகமாக ஹீரோயினாக வென்பா நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், பொன்வன்னன், ஊர்வசி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் மிக முக்கியமான வேடத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடித்திருக்கிறார். பள்ளி தலைமை ஆசியர் வேடத்தில் நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், இப்படத்தின் கதையை கேட்டதும் ஓகே சொல்லி நடித்தவர், இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் காட்சிகளை படமாக்கிய போதே, இப்படம் தன்னை நடிகராக வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். பிறகு அவர் நடித்த காட்சிகளை பார்த்தவர், இயக்குநர் வாசுதேவ் பாஸ்கரை பாராட்டியதோடு, இந்த படத்திற்காக சம்பளமாக தான் வாங்கிய காசோலையை திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அந்த அவரது வேடம் மிக சிறப்பாக வந்திருக்கிறதாம்.

 

இதை கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் சொல்லவில்லை, ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் கதையையும், கே.எஸ்.ரவிக்குமாரின் வேடம் குறித்தும் அறிந்த அனைவரும் சொல்வதோடு, இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்று கூற, தற்போது கே.எஸ்.ரவிக்குமார் விருதுக்காக காத்திருக்கிறாராம்.

 

கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் இப்படத்தின் கதையை கேட்டதம் ஓகே சொல்லியதோடு, இப்படம் நிச்சயம் ஹிட் படம் மட்டும் அல்ல, விமர்சனம் ரீதியாக சிறந்த படமாகவும் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

957

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery