இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இதிகாச அடிப்படையில் உருவாகும் அறிவியல் கற்பனை திரைப்படம் ‘கல்கி 2898 AD’. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய இந்திய நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், மகா சிவாராத்திரியை முன்னிட்டு இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திர பெயர் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, ‘கல்கி 2898 AD’ படத்தில் பிரபாஸ் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபாஸின் கதாபாத்திர உருவத்தையும் நேற்று வெளியிட்ட படக்குழு, அதற்கான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது.
புகைப்படத்தின் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க மிரட்டலாக இருக்கிறது. முழுமையான கறுப்பு நிற ஆடையுடன், தலையில் கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
சமீபத்தில் தான் நடிகர் பிரபாஸ், நடிகை திஷா பதானி, இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தின் ஒரு பாடலைப் படமாக்க இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.
வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம், ஒரு பன்மொழித் திரைப்படமாக இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும்.
இப்படம் மே 9, 2024 அன்று பான்-இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...