மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவல் ‘ஆடுஜீவிதம்’. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 90-களின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.
இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’. தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதை சொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது.
சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை புக் மை ஷோர் தளம் தற்போது உணர்த்தியுள்ளது.
ஆம், இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதற்கு சான்றாக, புக் மை ஷோ தளத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘கல்கி’, ‘தேவரா’ மற்றும் ‘இந்தியன்2’ போன்ற பான் இந்திய படங்கள் வெளிவர இருந்தாலும் அவற்றைத் தாண்டி, ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
‘புஷ்பா2’ படத்திற்காக 170,000+ பார்வையாளர்கள் ஆர்வம் காட்டியிருக்கும் அதே சமயத்தில், 129,000+ பார்வையாளர்கள் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். அற்புதமான திரையரங்க அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...