காமெடி நடிகர் தாடி பாலஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக நித்யா தாடி பாலாஜி மீது போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நித்யா, அவரது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாக தாடி பாலாஜி போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் சம்மந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களில் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நித்யா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தாடி பாலாஜி குறித்து வீடியோ ஒன்று வெளியானது. அதில், நித்யா மற்றும் குழந்தையை அறை ஒன்றில் அடைத்து, அறைக்கு வெளியே பாலாஜி தீ வைப்பது போல காட்டப்பட்டிருந்தது. மேலும், குழந்தையிடம் தகாத முறையில் நடந்ததாகவும், கடுமையான சொற்களை பயன்படுத்தி திட்டுவது போன்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ மற்றும் தாடி பாலாஜி, நித்யா அவரது ஆண் நண்பர்கள் என்று கூறப்படும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரிம் போலீசார் தனி தனியாக விசாரணை நடத்தினார்கள்.
இதில், நித்யாவிடம் நடத்திய விசாரணையில் அவர், தனது ஆண் நண்பருக்கு செல்போன் பரிசு வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணையின் போது அவர் குற்றச்சாட்டுக்களை மறைத்துள்ளார். ஆனால், அவர் நித்யாவிடம் செல்போனில் பேசியிருப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தாடி பாலாஜி கெட்டவரைப் போல காட்டப்பட்டு வந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையினால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இனி நடக்க இருக்கும் விசாரணையில் எந்த மாதிரியான உண்மைகள் வெளியாகப் போகிறதோ! என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...