உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எட்ஜ், ஷீ இஸ் எ ஹீரோ மற்றும் மான்ஸ்டர் மெஷின் போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு RKFI நிறுவனம் இனிமேல் பாடல் குறித்து அறிவித்ததிலிருந்தே, இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் பரவலான பாராட்டுக்களைப் பெற்றதுடன் இணையம் முழுக்க பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த சிங்கிள் பாடல் மூலம் இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள் இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இனிமேல் பாடலின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் தயாரிப்பாளர்கள் மூன்று ஆளுமைகள் இணையும் இப்பாடலைப் பெரிய அளவில் எடுத்துச்செல்வதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...