கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சித்ரா, அதையடுத்து கமல்ஹாசனின் ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர், ‘ஆட்ட கலசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’. ‘மதுமிதா’. ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமடைந்தார்.
திருமணமான பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர், தற்போது 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இது குறித்து கூறிய சித்ரா, “எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது, என்று முடிவு எடுத்திருக்கின்றேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்.” என்றார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...