இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து 'திருட்டு பாடம்' என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் திரிநாதா ராவ் தயாரிப்பாளர் பணியை மேற்கொள்ள, கார்த்திக் கதையை வித்தியாசமாக எழுதி இருக்கிறார். முன்னதாக இந்த கூட்டணி உருவாக்கிய 'தமாகா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'திருட்டு பாடம்' படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். டீசரின் படி இந்த படத்தின் கதை எப்படி பயணிக்கும் என்பதையும் கதையை நகர்த்தும் விதமும் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவையும் தெரியவந்துள்ளது. கதையில் நான்கு சிறு திருடர்கள் இணைந்து அவர்களது கிராமத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். கதையின் நாயகன் இந்திரா ராம் தனது குழுவை கொள்ளையடிக்க வழிநடத்துகிறார். இதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
டீசரில் ஒரு நண்பர்கள் குழுவில் நடக்கும் சம்பவங்கள் பொழுதுபோக்காக இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தின் நாயகி பயல் ராதாகிருஷ்ணாவின் கதாபாத்திரம் கதையில் சுவாரஸ்யத்தை ஏற்றுகிறது.
அறிமுக இயக்குநர் நிகில் கொள்ளமாரி கதையை சிறப்பாக கையாண்டு பல்வேறு எதிர்பாரா திருப்பங்கள் மூலம் காமெடியை கொண்டு வந்திருப்பது டீசரில் வெளிப்பட்டு இருக்கிறது. 'திருட்டு பாடம்' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ள 'திருட்டு பாடம்' ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும். திரிநாதா ராவ் நக்கினா மற்றும் கார்த்திக் கட்டமனேனி கூட்டணியில் மற்றும் ஓர் வெற்றி படமாக இது அமையும்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...