தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'கள்வன்'. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. ‘கள்வன்’ படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.
ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சிநேகன், ஏகாதேசி, மாயா மகாலிங்கம், நவக்கரை நவீன் பிரபஞ்சம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, என்.கே.ராகுல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...