வசந்த் ரவி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பொன் ஒன்று கண்டேன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதோடு, தனது ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ‘கண்டநாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ படங்களை இயக்கிய பிரியா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் வெளியீட்டுக்காக படக்குழு காத்திருக்கும் நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இப்படம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும், என்று புரோமோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், இது பற்றிய எந்த ஒரு தகவலும் அவர்களுக்கு தெரியவில்லை என்பது தான்.
இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள நடிகர் வசந்த் ரவி, ஜியோ ஸ்டுடியோவின் இத்தகைய செயலுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மைதானா? ஜியோ ஸ்டுடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு குறித்து எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ ஸ்டுடியோஸ்.
ஒரு நடிகனுக்கோ அல்லது கலைஞனுக்கோ வணிக ரீதியான தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுகளில் தலையிட முடியாது என்பது உண்மை தான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் வசந்த் ரவியின் இந்த பதிவால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...