டைடிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வீழ்த்தி வெற்றி பெற்ற ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு எதிராக, மேலும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளதால், விஜய் ஏரியாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தடை ஒரு பக்கம் இருந்தாலும், ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாவது உறுதி, என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம்.
இதற்கிடையில், சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன், என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக புது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “பெரிய நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாகும் போது, அந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் இருந்து முதல் 5 நாட்களுக்கு அதிக தொகையை கட்டணமாக தியேட்டர் நிர்வாகம் வசூலிக்கிறது.
ரஜினியின் கபாலி, விஜய்யின் பைரவா, சூர்யாவின் சிங்கம்-3 உள்ளிட்ட திரைப்படங்களை பார்க்க வந்த ரசிகர்களிடம் குறைந்தது ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்பட்டது.
இது போன்ற செயலை தடுக்கும் விதமாக, தீபாவளி அன்று வெளியாகும் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று அப்படத்தை வெளியிடும் தியேட்டர் உரிமையாளருக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு பொதுநல வழக்கு தன்மையுடன் உள்ளதால், இந்த வழக்கை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கிறேன், என்று உத்தரவிட்டார்.c
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...