Latest News :

மறு ஜென்மத்தை மையமாக வைத்து உருவாகும் ‘கங்கா தேவி’!
Wednesday March-20 2024

குமரன் சினிமாஸ் சார்பில் கே.என்.பூமிநாதன் தயாரிப்பில், ‘சண்டிமுனி’ பட இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்திற்கு ‘கங்கா தேவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘வரலாம் வா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கும் மஹானா கதையின் நாயகியாக நடிக்க, ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நளினி, ஆர்த்தி, கணேஷ், சூப்பர் சுப்பராயன், மொட்ட ராஜேந்திரன், சாய்தீனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

திகில் கலந்த க்ரைம் திரில்லர் ஜானரி திரைப்படமாக உருவாகும் இப்படம் குறித்து கூறிய இயக்குநர் மில்கா செல்வகுமார், “ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்த படத்தின் கதை.  'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன.” என்றார்.

 

வரும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததும் பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதை அடுத்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னையில் ஒரு பாடல் காட்சிக்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 

 

வித்யா சரண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய, வ.கருப்பன் மதி பாடல்கள் எழுதுகிறார். கலா, அசோக் ராஜா, லாரன்ஸ் சிவா ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, முத்துவேல் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சூபர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

Related News

9613

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery