இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் அவரது 16 வது திரைப்படத்தின் துவக்க விழா இன்று பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
புச்சி பாபு சனா இயக்கும் இப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட் சதீஷ் கிலாறு தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கட சதீஷ் கிலாறு திரைப்படங்கள் மீதான அவரது பிரத்யேகமான ஆர்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கி பழகிய பிறகு, அவர் ஒரு உயரிய தயாரிப்பு தரத்துடன் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் தனித்துவமிக்க முடிவை மேற்கொண்டார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் தர்காலிக தலைப்பாக ‘ஆர்.சி 16’ என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் துவக்க விழா இன்று கோலாகலாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...