ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கயல் ஆனந்தி, முதல் முறையாக திரில்லர் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். ‘ஒயிட் ரோஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசி கணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜசேகர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பூம்பாரை முருகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஞ்சனி தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, சுதர்ஷன் இசையமைத்துள்ளார். ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். டி.என்.கபிலன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
பரபரப்பான திரில்லர் ஜானர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காவல் கட்டுப்பாட்டு மையம் முக்கிய பங்கு வகிப்பதால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் காவல் கட்டுப்பட்டு மையம் ஒன்று செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகளையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி ‘ஒயிட் ரோஸ்’ வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கயல் ஆனந்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ஆர்.கே சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...