Latest News :

’டைனோசர்ஸ்’ புகழ் உதய் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘ஃபேமிலி படம்’!
Monday March-25 2024

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, பத்திரிகையாளர்களிடம் பாராட்டு பெற்ற படங்களில் ஒன்று ‘டைனோசர்ஸ்’. இப்படத்தில் நாயகனாக நடித்த உதய் கார்த்திக், தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்ததோடு, ”தமிழ் சினிமாவில் நிச்சயம் தனக்கென தனி இடத்தை  பிடிப்பார்” என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்.

 

இந்த நிலையில், உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஃபேமிலி படம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யு.கே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இயக்குகிறார். இதில் உதய் கார்த்திக் ஜோடியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

 

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள்,  அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அழகான உனர்வுப்பூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

 

Family Padam

 

மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிவீ இசையமைக்கிறார். கே.பி.நந்து கலை இயக்குநராக பணியாற்ற, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். 

Related News

9625

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery