Latest News :

சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!
Monday March-25 2024

அறிமுக இயக்குநர் மனோஜ். என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் மூலம் பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது.

 

மேலும், பிரபல டிஜிட்டல் ஊடகமான பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) இப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடுகிறது. பிகைண்ட்உட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான மனோஜ்.என்.எஸ் இப்படத்தை தயாரித்து, இயக்கவும் செய்கிறார். 

 

படம் குறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், ”சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போ செய்யலாம் பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்கிறார். 

 

நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது, ”நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். 

 

மனோஜ் NS கூறுகையில், ”இந்தத் திரைப்படம் இந்தியாவின்  இரண்டு மாபெரும்  கலைஞர்களான ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா இருவரையும்  கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

 

காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்."

 

இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு சில மாதங்களில் தலைப்பை வெளியிடுவோம். தமிழில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா அவர்களின் 6-வது கூட்டணியைப் குறிக்கும் வகையில் #arrpd6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் - இந்தியா படமாக திரைக்கு வர திட்டமிட்டு உள்ளோம். எங்களின் புதிய முயற்சிக்கு அனைவரும் உளமார ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

9628

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery