விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்க, 7சி எஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரிக்க, அமே நாராயணா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், இப்போது இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போட தொடங்கியுள்ளார்கள். ஏற்கனவே விஜய் சேதுபதியில் ஒரு படம் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் வியாபாரமான நிலையில், இப்படம் படப்பிடிப்பு முடிவதற்குள் வியாபரமாகியிருப்பது விஜய் சேதுபதியின் மார்கெட்டை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்திற்கு கோவிந்தராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியாக உள்ள நிலையில், படத்தையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...