கவர்ச்சி நடிகை சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு இணையத் தொடர் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த இணையத் தொடருக்கு ‘ஸ்மோக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பல பாகங்களாக வெளியாக இருக்கும் ‘ஸ்மோக்’ பாகம் ஒன்றின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்த இணையத் தொடரில் நடிகை சோனா தனது கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். சோனாவின் வெவ்வேறு வயதிலான காலகட்டங்களில் அவரது கதாபாத்திரமாக நடிக்கும் ஆதினி (5 வயதில்), ஜனனி (14 வயதில்) மற்றும் ஆஸ்தா அபய் (30 வயதில்) ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 30 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடிகை சோனாவே நடிக்க இருக்கும் தகவலை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து நடிகை சோனா கூறுகையில், ”புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள்” என்றார்.
யுனிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ இணையத் தொடர் கோடைக்காலத்தில் வெளியாக உள்ளது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...