விமல், நடிப்பில் இயக்குநர் எஸ்.எழில் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இதில் விமலுக்கு ஜோடியாக பொன்னாடா நடிக்க, இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதா நடிக்கிறார். ஜனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ரவிமரியா, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, சாம்ஸ், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் 20 ஆம் தேதி இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தில் இடம்பெறும் ”டோலி டாங்க் ஆனா டேஞ்சரு...” என்ற பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபல பாலிவுட் நடனக் கலைஞர் சினேகா குப்தா உடன் விமல் குத்தாட்டம் போடும் இந்த பாடல் காட்சிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.50 லட்சத்தில் பிரமாண்ட பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை விமல் நடித்த படங்களில் அவர் ஆடிய நடனங்களில் இருந்து இதுபோல் இப்படி அவர் ஆடியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடனத்தில் விமல் மிரட்டி இருக்கிறாராம். இதற்காக சில நுணுக்கமான நடன அசைவுகளையும் தினேஷ் மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டு சினேகா குப்தாவுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அதிரடி நடனம் ஆடி அசத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கவிஞர் சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை, ஜித்தின் ராஜ் மற்றும் எம்.எம்.மானசி பாடியுள்ளனர்.
வித்யாசகர் இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார். முருகன் வசனம் எழுத, ஆனந்த் லிங்கா குமார் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்ற யுகபாரதி, விவேக், சுப்ரமணியம் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி வரும் ‘தேசிங்கு ராஜா 2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...