நவீன வசதிகளுடன் கூடிய போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் ஸ்டுடியோ ‘லைட்ஸ் ஆன் மீடியா’ திறப்பு!
Saturday March-30 2024

சென்னை வளசரவாக்கம் ராதாகிருஷ்ணன் சாலையில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைந்துள்ளது ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ. திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் முக்கியமான டிஐ (DI), விஎஃப்எக்ஸ் (VFX), மிக்ஸ் (Mix), டப்பிங் (Dubbing) என்கிற நான்கு கட்ட பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய நவீன ஸ்டுடியோவாக இது உருவாகியுள்ளது. சுரேஷ், வெங்கடேஷ், சுந்தர் என மூன்று பேர் இணைந்து இந்த ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளனர்.

 

இதன் துவக்க விழாவிற்கு இயக்குனர்கள் பேரரசு, சுப்ரமணிய ஷிவா , மந்திர மூர்த்தி, கேபிள் சங்கர், வெங்கட், ஆர். கண்ணன், மீரா கதிரவன், இசையமைப்பாளர் சத்யா, நடிகர்கள் விவேக் பிரசன்னா, கவிதா பாரதி , தமன், விஜீத், நடிகை சனம் ஷெட்டி, தயாரிப்பாளர்கள் நந்தகோபால், ஜெயக்குமார்  ஆகியோர் வந்து விழாவினை சிறப்பித்தனர்.

 

‘லைட்ஸ்  ஆன் மீடியா’ நிறுவனர்களில் ஒருவரான சுந்தர் இந்த ஸ்டுடியோ பற்றி கூறும்போது, “கடந்த 2014ஆம் ஆண்டு டிஜிட்டல் புரமோஷனுக்காக இந்த ‘லைட்ஸ் ஆன் மீடியா’ நிறுவனத்தை துவங்கினோம். அதைத்தொடர்ந்து ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஎஃப்எக்ஸ் (VFX) கம்பெனி ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்பிறகு போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அத்தியாவசியமான டிஐ (DI), மிக்ஸ் (Mix), டப்பிங் (Dubbing)  போன்ற தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்தோம். 

 

இவை எல்லாமே முன்பு தனித்தனி இடங்களில் அமைந்திருந்தன. இந்த நான்கு தொழில்நுட்ப பிரிவுகளும் ஒரே ஸ்டூடியோவில் அமைந்தால் இந்த பணிகளுக்காக எங்களது நிறுவனத்தைத் தேடி வரும் திரையுலகினருக்கு ஒரே இடத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால் தற்போது வளசரவாக்கத்தில் இதற்கான புதிய ஸ்டுடியோவை நிர்மாணித்து உள்ளோம். இதனால் அவர்களின் சிரமம் குறைவதுடன் ஒரு படம் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு செல்லும் வரை இங்கே உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புடனும் இருக்கும். 

 

‘அடியே’,  கிடா, பம்பர், ஜீவி-2 சேரனின் ‘ஜர்னி’ வெப்சீரிஸ் என இதுவரை 40 படங்கள், வெப் சீரிஸுகள் ஆகியவற்றுக்கு விஎப்எக்ஸ் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம். 

 

விரைவில் வெளியாக இருக்கும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் , ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன், பிரபுதேவாவின் ‘ஜாலிலோ ஜிம்கானா’, ஹன்சிகாவின் ‘காந்தாரி’ உள்ளிட்ட முக்கிய படங்களின் VFX பணிகள் எங்களது ஸ்டுடியோவில் தான் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளையும் தற்போது ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதிகள் இருப்பதால் பல தயாரிப்பாளர்கள் எங்களது ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோவை அதிகம் தேடி வர ஆரம்பித்துள்ளனர்” என்கிறார்.

 

கடந்த வருடம்  வெளியான ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தையும் இவர்கள் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9636

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery