புதுமையான வடிவத்தில் வெளியாகியிருக்கும் ‘கேன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Tuesday April-02 2024

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ்,  திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நான்கு வருடங்களாக உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றியவர் தற்போது ‘கேன்’ (can) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

ஷோபனா கிரியேஷன்ஸ் சார்பில் டி.கருணாநிதி தயாரிக்கும் இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ்  முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

 

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லும் இயக்குநர் ஆடம்ஸ், அதை நகைச்சுவையுடன் கூடிய கமர்சியல் கதைக்களத்தோடு கொடுத்திருக்கிறார்.

 

இப்படம் தொடர்பான விளம்பர வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் கதாபாத்திரங்களை கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், இந்த புதுமையான முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

முழுக்க முழுக்க ஊட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவலை படக்குழு அறிவிக்க உள்ளது.

 

Can

 

ஆடம்ஸ் எழுதி இயக்கும் இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைக்க, பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார். மதன்.ஜி படத்தொகுப்பு செய்ய, என்.கே.ராகுல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீதர் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

9648

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery