’புஷ்பா 2’-வின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday April-02 2024

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா : தி ரூல்’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்திய அளவில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ‘புஷ்பா : தி ரூல்’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.

 

வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘புஷ்பா : தி ரூல்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி ‘புஷ்பா : தி ரூல்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த  'புஷ்பா: தி ரூல்' படம் முக்கியமான ஒன்று. நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார். 

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவில், எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் என்.மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா : தி ரூல்’ சினிமா ரசிகர்களுக்கான மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

9649

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery