இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த துஷாரா விஜயன், ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’, தனுஷின் ‘ராயன்’ உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது விக்ரமின் 62 வது படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...