இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா : தி ரூல்’ படத்தின் டீசர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏபரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, நாயகி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளுக்காக ஏபரல் 5 ஆம் தேதி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா “சாமியே...” பாடல் மூலம் அனைவரையும் ஆட்டம் போட வைத்துவிட்டார். முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனின் காதலியாக இருந்தவர், இரண்டாம் பாகத்தில் மனைவியாக எப்படிப்பட்ட நடிப்பை கொடுத்திருப்பார், என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, அவருடைய பிறந்தநாளில் அவரது அழகான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதையும் உணர்த்தும் விதமாக இருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...