பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா, தற்போது படு பிஸியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஓவியா போல, மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர்களாகவே வீடியோக்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள பாடலாசிரியர் சினேகன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறாராம். ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த ஒரு படம், பாதியிலேயே நிற்கிறது, என்பது தனிக்கதை.
இப்படி திடீர் ஹீரோவாகியுள்ள சினேகனுக்கு ஓவியா தான் ஜோடியாம். இந்த பிக் பாஸ் ஹீரோ, ஹீரோயினை வைத்து படம் தயாரிப்பவர் பிரபல இசையமைப்பாளர் சி.சத்யா.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சி.சத்யா, தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்தவர், தற்போது தயாரிப்பாளராகவும் சினிமாவில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் சினேகன் - ஓவியா கூட்டணி மூலம் இறங்கியிருக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் பிர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...