திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தலைவராக விஷ்ணு மஞ்சு தொடர பொதுக்குழு ஒப்புதல்
Wednesday April-10 2024

தெலுங்குத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA)-ன் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தலைவர் விஷ்ணு மஞ்சுவின் மதிப்பிற்குரிய வழிகாட்டுதலின் கீழ் MAA கட்டிடத் திட்டம் முடியும் வரை தற்போதைய தலைமை தொடர்ந்து பணியாற்றும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில், மே மாதம் திட்டமிடப்பட்ட வரவிருக்கும் தேர்தல்கள், ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட நிதி சேகரிப்பு நிகழ்வு மற்றும் MAA கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது.

 

ஆலோசனையின் போது, தலைவர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தை (MAA) கட்டிடம் வெற்றிகரமாக முடிக்கும் வரை நீட்டிக்க முன்மொழியப்பட்டது. இந்த முன்மொழிவு தற்போதைய அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் ஒருமித்த ஆதரவைப் பெற்றது, தற்போதைய தலைமையின் மீதான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது.

 

அமோக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நன்றி தெரிவித்த திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தலைவர் விஷ்ணு மஞ்சு, உறுப்பினர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, அனைத்து MAA உறுப்பினர்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக, அவருக்கும் அவரது குழுவிற்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை ஒப்புக்கொண்டார்.

 

மேலும், கடந்த 12 ஆண்டுகளில் ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன்ஸ்’ (MAA) தேர்தல், ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித சர்ச்சையும், மோதலும் இல்லாமல் சுமூகமாக நடந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9667

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery