தமிழகம் முழுவது டெங்கு காய்ச்சலால பலர் பலியாகி வருகின்றனர். டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், நாளுக்கு நாள் டெங்குக் காய்ச்சல் அதிகமாக பரவும் செய்கிறது.
இந்த நிலையில், பிரபல காமெடி நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் தங்கையின் 10 வயது மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “இப்போது நான் ராமநாதபுரத்துக்கு துக்க காரியத்துக்கு சென்றுகொண்டுள்ளேன். என் தங்கையின் பத்து வயது மகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் பலர் உயிரிழந்து வருகின்றனர். திருவண்ணாமலை , நாமக்கல், நாகை , திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் அதிக அளவில் மக்கள் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக போர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...