தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று கூறி வரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 6,7 தேதிகளில் சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது. வரும் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சமந்தா ருத்பிரபு என்ற தனது பெயரை, சமந்தா அக்கினேனி என சைதன்யா வீட்டு வழக்கப்படி மாற்றிக் கொண்டாராம். சமந்தாவின் இந்த நடவடிக்கையால் மாமனார் நாகர்ஜுனா ரொம்ப மகிழ்ச்சியடைந்தாராம்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...