Latest News :

மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்!
Monday April-15 2024

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாவில் பன்முகத்திறன் கொண்டவராக வலம் வரும் ராகவா லாரன்ஸ், பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக ஆதரவற்ற சிறுவர்களை படிக்க வைப்பதோடு, ஏழை எளிய சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதோடு, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு நடனக் கலையை கற்றுக்கொடுத்து அதன் மூலம் அவர்கள் தங்களது சொந்த உழைப்பில் வாழ்வதற்கான வழியை அவர் காட்டி வருகிறார்.

 

அந்த வகையில், ராகவா லாரான்ஸின் ஆதரவால் தற்போது நடனக் கலைஞர்களாக வலம் வரும் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் ‘கை கொடுக்கும் கை’ என்ற பெயரில் நடனக் கலைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடும் இவர்கள், ராகவா லாரன்ஸில் திரைப்படங்களிலும் தோன்றுவார்கள்.

 

இந்த நிலையில், வெறும் நடனக் கலையோடு நின்றுவிடாமல், தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்பம் சாகச கலையிலும், இந்த குழுவினர் கற்று தேர்ச்சி பெற்றதோடு, பல நிகழ்ச்சிகளில் தங்களது கலையை நிகழ்த்தி வருகிறார்கள். உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த மல்லர் கம்பம் கலையில், தற்போது ராகவா லாரன்ஸின் ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழுவின் ஈடுபட்டு சாதித்திருக்கிறார்கள். இதை உலகிற்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுடன் ‘கை கொடுக்கும் கை’ குழுவினர்  இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் முன்னிலையில் மல்லர் கம்பம் கலையை செய்துக்காட்டி அசத்தினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பேசுகையில், “எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான்.  எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன். சினிமாவில்  சில நேரம் ஒரே மாதிரி இருக்கிறதே இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் மாஸ்டர் என்பார்கள், நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும் என்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ என ஒன்று இருக்கிறது அதைக்  கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்றார்கள். இது நல்ல வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது உங்களால் முடியுமா ?  எனக் கேட்டேன், ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக்கொண்டார்கள், இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்களால் எல்லாமே முடியும்.  

 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய காரணமே, இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்கள் வீட்டு விழா, தெரிந்த  நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன். இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்தக்கலை இவர்களை வாழ வைக்கும். இந்தக்கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் நாளை என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றவர், இந்த கலையை இவர்களுக்கு கற்றுக்கொடுத்த மாஸ்டர் ஆதித்யன் மற்றும் குழுவினரை பாராட்டினார்.

 

Raghava Lawrence Kai Kodukkum Kai

 

‘கை கொடுக்கும் கை’ குழு ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், “நீங்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை கடவுள் மாற்றுத்திறனாளிகளாக படைத்தாலும், அம்மா அப்பா ஏழ்மையாக இருந்தாலும், ராகவா லாரன்ஸ் மாஸ்டர் எங்களுக்கு என ஒரு அறக்கட்டளை உருவாக்கி, எங்களுக்கு பயிற்சி தந்து வாய்ப்புகள் வாங்கித் தந்து, எங்களுக்கு கடவுளாக இருக்கிறார். டான்ஸ் மட்டுமல்லாமல் இப்போது எங்களுக்கு மல்லர் கம்பம் பயிற்சி தர, இப்போது எங்கள் குழுவிற்கு பல வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது. நீங்களும் உங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.” என்றார்.

Related News

9680

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery