Latest News :

’ஹனுமன்’ நாயகன் தேஜா சஜ்ஜாவின் புதிய படம் அறிவிப்பு வெளியானது!
Tuesday April-16 2024

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான பான் இந்தியா திரைப்படமான ‘ஹனுமன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவை சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையே, நடிகர் தேஜா சஜ்ஜாவின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் கைகோர்த்திருக்கும் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார். 

 

இன்னும் தலைப்பு வைக்காத இந்த படத்தின் அறிவிப்புக்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, முகத்தில் தீவிரமான பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார்.  அவரது முந்தைய படத்தில்  பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய  ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி  சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

 

ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி  இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும், ஈகிள் படம் போலவே இப்படமும்  புதிய வரலாறு படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அற்புதமான திரைக்கதை வல்லுநரான கார்த்திக் கட்டம்நேனி, இது சூப்பர் யோதாவின் சாகசக் கதையில், தேஜா சஜ்ஜாவை பிரம்மாண்டமாக காட்டவுள்ளார். 

 

இந்திய அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளதால், படம் உலகளாவிய தரத்துடன் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும். 

 

படத்தின் மற்ற விவரங்களும் தலைப்பு வெளியாகும் அன்றே அறிவிக்கப்படும். தேஜா  உடைய கடைசிப் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததால், அவரது அடுத்த படத்திற்காக நாடு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது.

Related News

9684

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery