Latest News :

உங்களின் நீண்ட நாள் கேள்விக்கான பதில் தான் ‘பொன் ஒன்று கண்டேன்’! - நடிகர் வசந்த் ரவி
Wednesday April-17 2024

’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என வித்தியாசமான கதைத்தேர்வு மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் வசந்த் ரவியிடம் பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி ரசிகர்களும் கேட்கும் ஒரு கேள்வி, “நீங்க எப்போது ஜாலியான படத்தில் நடிப்பீங்க? என்பது தான். தற்போது அந்த கேள்விக்கு பதிலாக வசந்த் ரவி நடித்துள்ள படம் ‘பொன் ஒன்று கண்டேன்’.

 

குடும்பமாக பார்க்க கூடிய ஜாலியான கதைக்களத்தோடு, வசந்த் ரவி மிக ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படம் நேரடியாக ஜியோ சினிமாஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த தளம் முழுக்க முழுக்க இலவசம் என்பதால், தற்போது உலகம் முழுவதும் இப்படத்தை கொண்டாடும் மக்கள், வசந்த் ரவியின் புதிய பரிமாணத்தையும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நடிகர் வசந்த் ரவி, நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்ததோடு, அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடினார். அவருக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Vasanth Ravi Birthday Celebration

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வசந்த் ரவி, “என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.  அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள் தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ”எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?” என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு  மிகப்பெரிய பெருமை. ”உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை” என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம் அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

 

’ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார் தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை?,  எப்படி இருக்கப் போகிறது?  என்பது எனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்த போதே நெல்சன் சாரிடம் ,“பார்ட் 2-க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 

 

’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி. வித்தியாசமான படங்களில்  நடித்து மீண்டும் உங்களை சந்திக்கிறேன் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.” என்றார்.

Related News

9685

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery