Latest News :

அம்பானி வீட்டு திருமணத்திற்கு நிகராக நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
Thursday April-18 2024

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து அன்றைய தினமே மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காகவும் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, சிவமணியின் இசை நிகழ்ச்சி மூலம் பிரமாண்ட இசை நிகழ்ச்சியே நடத்தப்பட்டது.

 

மேலும், திருமண வரவேற்பில் கலந்துக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சிவமணியின் ட்ரம்ஸ் இசைக்கு நடனம் ஆடி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவருடன் சேர்ந்து இயக்குநர் அட்லீ, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடனம் ஆடி அசத்தினார்கள்.

 

Aishwarya and Tarun Reception

 

சமீபத்தில் நடைபெற்ற தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் நடனம் ஆடியது பேசுப்பொருளாக அமைந்த நிலையில், தற்போது இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனம் ஆடியிருப்பதும் இந்திய திரையுலகில் பேசுப்பொருளாகியிருக்கிறது. இதனால், அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு நிகராக இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணமும் பிரமாண்டமான முறையில் மிக சிறப்பாக நடந்ததாக திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் பேசி வருகிறார்கள்.

 

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் பட்டியல் இதோ:

 

நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரன் அவரது மனைவி உபாசனா, ரன்வீர் சிங், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மோகன்லால், விஜய் ஆண்டனி, உபேந்த்ரா, எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், அருண் விஜய், கவுண்டமணி, சூரி, கெளதம் கார்த்திக், ராமராஜன், மோகன், பாபி சிம்ஹா, பார்த்திபன், பிரசன்னா மற்றும் சினேகா, சிபிராஜ், வைபவ், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி, சதிஷ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், வசந்த் ரவி, ராஜேஷ், கருணாகரன், சார்லி, தம்பி ராமையா, பாய்ஸ் மணிகண்டன், சாம்ஸ், அஜய் ரத்னம், சுதன்சு பாண்டே, ரவிகிருஷ்ணா, பாண்டியராஜன், ரோபோ சங்கர்.

 

நடிகைகள் ஷாலினி அஜித்குமார், காஜல் அகர்வால், கல்யாணி பிரியதர்ஷன், ரகுல் ப்ரீத் சிங், கிரித்தி ஷெட்டி, ஸ்ருதி ஹாசன், ஜான்வி கபூர், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ஆண்ட்ரியா, அதிதி பாலன், ஜனனி, வேதிகா, கஸ்தூரி, அனுஷியா, வடிவுக்கரசி, ஸ்ரீப்ரியா.

 

இயக்குநர்கள் பாலா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர், எஸ்.பி.முத்துராமன், டி.ராஜேந்தர், விக்ரமன், ராஜிவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி மற்றும் ப்ரீதா ஹரி, மோகன் ராஜா, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், நெல்சன், கிருத்திகா உதயநிதி, விஜய், கார்த்திக் சுப்பராஜ், எச்.வினோத், வசந்த் சாய், சரண், சசி, சீனு ராமசாமி, தியாகராஜன், சிம்புதேவன், பாலாஜி சக்திவேல், பாலாஜி தரணிதரன், சித்ரா லட்சுமணன்.

 

Aishwarya and Tarun Reception

 

தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஜி.கே.எம்.தமிழ்குமரன், தில் ராஜு, கலைப்புலி எஸ்.தாணு, டிஜி.தியாகராஜன், போனி கபூர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி, ஏ.எம்.ரத்னம், ஐங்கரன் கருணாமூர்த்தி, தனயா, தனஞ்செயன், ராஜசேகர் மற்றும் குடும்பத்தார், இயக்குநர் மாதேஷ், செம்பியன்.

 

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சிவமணி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், ராம்ஜி, ரத்னவேலு, திரு, கோபிநாத், மறைந்த கே.வி.ஆனந்தின் குடும்பத்தார். பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்கி, கபிலன் வைரமுத்து, விவேகா, விவேக், நடன இயக்குநர்கள் சோபி, லலிதா சோபி, பாடகர் பிளேஸி, சுஜாதா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

Aishwarya and Tarun Reception

 

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குநர்கள் லிங்குசாமி, அட்லி, வசந்த பாலன், அறிவழகன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை, Executive Producer சுந்தர்ராஜ், விமல், கல்யாணம், PRO சதிஷ் (Team AIM) ஆகியோர் வரவேற்றனர்.

 

மேலும், திருமணத்திற்கு மறுநாள் மணமக்கள் ஐஸ்வர்யா - தருண் மற்றும் இயக்குநர் ஷங்கர், மணமகனின் தந்தை கார்த்திகேயன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Related News

9688

Kids special animation film 'kiki & koko' teaser launch event
Saturday December-27 2025

India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...

இந்த படம் எங்களுக்கு பெருமை - ‘கிகி & கொகொ’ படக்குழு உற்சாகம்
Saturday December-27 2025

இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...

வைரலான ஸ்ருதிஹாசன் பாடல்!
Saturday December-27 2025

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...

Recent Gallery