Latest News :

’காந்தாரா’, ’ஹனுமன்’ படங்கள் வரிசையில் ‘ரூபன்’ இடம் பிடிக்கும் - இயக்குநர் ஐயப்பன் நம்பிக்கை
Thursday April-18 2024

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், பிற மொழிகளில் அதுபோன்ற படங்கள் வெளியாகி தமிழ்நாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், ‘காந்தாரா’, ‘ஹனுமன்’ போன்ற படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆன்மீக திரைப்படங்களாகவும், சிறுவர்களுக்கான ஃபேண்டஸி கமர்ஷியல் படங்களாகவும் வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில், ‘காந்தாரா’, ‘ஹனுமன்’ போன்ற படங்களைப் போல் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாவதில்லையே!, என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரூபன்’. ஐயப்ப சாமியைப் பற்றி பேசும் ஆன்மீகத்திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தாலும், பல்வேறு ஃபேண்டஸி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகியிருக்கிறது.

 

ஏ.கே.ஆர் பியூச்சர் பிலிம்ஸ் சார்பில் ஆறுமுகம், இளங்கார்த்திகேயன் ராஜா இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஐயப்பன் இயக்கியுள்ளார். விஜய் பிரசாத் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் காயத்ரி ரெமா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சார்லி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இபப்டத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மோகன்.ஜி, கணேஷ் கே.பாபு, நடிகர் சார்லி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஐயப்பன் படம் குறித்து கூறுகையில், “இந்த படம் கண்டிப்பா ஒரு கமர்ஷியல் கலந்த  படமா இருக்கும். இது ஒரு சாமி படம் என்று எல்லாரும் பதிவு பண்றதால கண்டிப்பா இது அப்படி கிடையாது, நீங்க சமீபத்துல காந்தாரா, அனுமான் போன்ற படங்கள் வரிசையில் கண்டிப்பா இந்த படம் இடம் பிடிக்கும். நல்ல கமர்ஷியல் விசயங்களைக் கொண்ட ஒரு ஆன்மீக படமாக இதை நனக்க எடுத்திருக்கோம். இந்த தயாரிப்பாளர்கள் ரொம்ப ரொம்ப எங்களுக்கு சப்போர்ட் பண்ண விதம் பெரிய விஷயம்.ஒரு பெரிய சேலஞ்ச் என்னன்னா சினிமாவுல ஒரு சின்ன பட்ஜெட் குடுத்துட்டு அதுல ஒரு பெரிய விஷுவல் காட்டறது என்பது ஒரு சவாலான விஷயம், நான் அந்த பெரிய விஷுவல் பண்றதுக்கு நான் படிச்ச நாவல் எனக்கு என்ன சொல்றேன் கேமரா மட்டும் குடு எனக்கு அது போதும் அப்படி எல்லா இடத்திலும் சொல்லுவாங்க, ஏன்னா அது ஒன்னு தான் நான் பேசுற ஆயுதமா எல்லா இடத்திலும் பார்க்கப்படுது அதனால் அந்த ஆயுதத்தை என்கிட்ட கொடுத்துட்டாங்க நான் ஓடிட்டே இருந்தேன் அதனால இந்த தயாரிப்பாளர்களுக்கு மிகவும் நன்றி.” என்றார்.


Related News

9689

விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் 'டயங்கரம்' படம் தொடங்கியது!
Monday October-27 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது...

வியப்பில் ஆழ்த்தும் மாதவனின் புதிய மாற்றம்!
Monday October-27 2025

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...

நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!
Monday October-27 2025

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்...

Recent Gallery