தீபாவளி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்துக்கொண்டிருப்பதால், ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
டைடில் பிரச்சினை, நீதிமன்ற வழக்கு என ஒவ்வொரு பிரச்சினையில் இருந்தும் மீண்டு வரும் ‘மெர்சல்’ தற்போது புதிதாக ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளது.
பொதுவாக திரைப்படங்களில் விலங்குகள் காட்சிக்காக பயன்படுத்தப்பட்டால் விலங்குகள் நலவாரியத்தில் உரிய அனுமதி பெற வேண்டும். மேலும், இப்படத்தில் விலங்குகள் யாவும் துன்புறுத்தப்படவில்லை என்று சான்றிதழ் பெற்ற பின்பே படத்தை திரையிட வேண்டும்.
மொ்சல் படத்தில் புறாக்கள் பறப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த காட்கள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை தான் என்பதற்கான ஆதாரங்களை படக்குழுவினா் அளிக்கவில்லை எனவும் திரைப்படத்தில் இடம் பெறும் பாம்பின் பெயா் ராஜநாகம் என்பதற்கு பதிலாக நாகப்பாம்பு என்று மாற்றி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் விலங்குகள் நலவாரியத்தின் அனுமதி ’மொ்சல்’ படத்திற்கு கிடைக்கவில்லை.
இந்த அனுமதி கிடைக்காகததால், ‘மெர்சல்’ அறிவித்தபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...