நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தங்கலான்’ படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, ஆஸ்கார் விருதுக்கு செல்ல வேண்டிய படம், என்ற பாராட்டையும் பெற்று வருகிறது. இதற்கிடையே அதே நாளில், விக்ரமின் மற்றொரு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. அதற்காக சிறப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட அந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 62 வது படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதற்காக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் ”முனி அடித்து நாற்பது பேர் இறந்துவிட்டார்கள்” என்று ஒருவர் அல்ல, அடுத்த காட்சியில் விக்ரமின் அறிமுகத்தை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இப்படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் முனியாகவும் அதிரடி காட்டப்போகிறார், என்பது வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...