திரை இசை மற்றும் சுயாதீன இசைத்துறையில் முன்னணி நிறுவனமான சரிகமா தயாரிப்பில், எஸ்.கணேஷ் இசையில் உருவாகியுள்ள இசை ஆல்பம் ’எண்டே ஓமனே...’. விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்த பாடல் வீடியோவை கார்த்திக் ஸ்ரீ இயக்கியிருக்கிறார்.
சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் ஆகியோர் குரலில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
’கனா’ படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில், கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட பின்னணியில், வண்ணங்கள் பொழியும் அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலுக்கு அஸார் நடனம் அமைத்துள்ளார். கிஷோர். ஆர் கலை இயக்குநராக பணியாற்ற, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...